வாழை கழிவில் இருந்து கயிறு தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய முருகேசன் என்ற தொழில் ஆர்வலருக்கு , பிரதமர் மோடி பாராட்டு

0 3373
வாழை கழிவில் இருந்து கயிறு தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய முருகேசன் என்ற தொழில் ஆர்வலருக்கு , பிரதமர் மோடி பாராட்டு

வாழை கழிவுகளில் இருந்து நார் தயாரித்து, அதன் மூலம் பைகள், கூடைகள் போன்றவற்றை தயாரிக்கும் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவருடன் பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில் கலந்துரையாடினார்.

இது போன்ற முயற்சிகளால் சுற்றுச்சூழல் சீர்கேட்டில் இருந்து நாட்டை பாதுகாப்பதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வழிகளும் கிடைக்கும் என மோடி குறிப்பிட்டார்.

மோடியுடன் பேசியதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கும் முருகேசன், விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் தன்னை மாற்றி யோசிக்க வைத்ததாக கூறினார்.

வாழைக்கழிவில் இருந்து நார் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ள முருகேசன், அதை பயன்படுத்தி மதிப்பு கூட்டு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments