அர்ஜென்டினாவில் கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரி போராட்டம் : பாத்திரங்களில் ஒலி எழுப்பியவாறு நூதன போராட்டம்

0 725
அர்ஜென்டினாவில் கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரி போராட்டம் : பாத்திரங்களில் ஒலி எழுப்பியவாறு நூதன போராட்டம்

ர்ஜென்டினாவில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்க வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பியூனஸ் அயர்ஸ் வீதியில் உள்ள அதிபர் மாளிகை முன்பு திரண்ட மக்கள் கையில் கிடைத்த பாத்திரங்களை கொண்டு ஓசை எழுப்பியபடி, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அர்ஜெண்டினாவில் டிசம்பர் மாத இறுதியில் சுகாதார பணியாளர்களுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஊழல் இருப்பதாக அந்நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments