குடிநீர் தொட்டி குழாயில் சுருட்டி அடைக்கப்பட்டிருந்த தேசியக் கொடி.. அரசுப்பள்ளியில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாகப் புகார்..!

0 1732
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டி இரும்புக் குழாயில் தேசியக் கொடியைக் கொண்டு அடைத்து, அதனை அவமதித்துவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டி இரும்புக் குழாயில் தேசியக் கொடியைக் கொண்டு அடைத்து, அதனை அவமதித்துவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

வெங்கடதாம்பட்டி காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள அந்தப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியின் குழாய் பகுதி சேதமடைந்துள்ளது. தண்ணீர் வெளியேறாமல் தடுக்க அந்தக் குழாயில் தேசியக் கொடியை சுருட்டி, உள்ளே செருகி வைத்துள்ளனர்.

இதனைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக தேசிய கொடியை அகற்றினர். பள்ளி மூடப்பட்டுள்ள நிலையில், இந்த செயலை செய்தது யார் என விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments