19 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி பாராட்டு..!

0 1347
19 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி பாராட்டு..!

19 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வணிக முறையில், அமேசானியா 1 உள்ளிட்ட 19 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய என்எஸ்ஐஎல் மற்றும் இஸ்ரோ குழுவினருக்குப் பாராட்டுக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் பிரேசில் அதிபர் ஜைர் போல்சோனாரோவுக்கும், அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கும் பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். நமது விண்வெளித்துறை ஒத்துழைப்பில் இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என மோடி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments