18 மணி நேரத்தில் 25.54 கி.மீ நீள சாலை அமைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சாதனை..!

0 7610
18 மணி நேரத்தில் 25.54 கி.மீ நீள சாலை அமைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சாதனை..!

தினெட்டே மணி நேரத்தில் 25.54 கிலோ மீட்டர் நீளமுள்ள நான்கு வழி சாலையை அமைத்து, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சாதனை படைத்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 52 ல் விஜய்பூர்-சோலாபூர் இடையே போடப்பட்ட இந்த சாலை, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சுமார் 500 ஒப்பந்த சாலைப்பணியாளர்களின் உதவியுடன் குறுகிய காலத்தில் இவ்வளவு நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களுக்கு இடையேயான முழுமையான 110 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை அமைக்கும் பணி வரும் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும்.

பெங்களூரு முதல் குவாலியர் வரையிலான போக்குவரத்து நெடுஞ்சாலையின் ஒரு அங்கமாக இந்த சாலை அமைக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments