தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் திமுக தீவிரம்..! நாளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மதிமுக, விசிகவுக்கு அழைப்பு

0 3911
தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் திமுக தீவிரம்..! நாளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மதிமுக, விசிகவுக்கு அழைப்பு

தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி பங்கீடு, கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அக்கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு, மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது. பேச்சுவார்த்தை முடிவில், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments