"வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப் பெற வேண்டும்" - பாஜக தேர்தல் பொறுப்பாளர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தியதாகத் தகவல்

0 3556
"வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப் பெற வேண்டும்" - பாஜக தேர்தல் பொறுப்பாளர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தியதாகத் தகவல்

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டு பெற வேண்டும் என அக்கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வெற்றி பெற செய்வதற்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை வழங்கிய அவர், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டு பெற வேண்டும் என அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments