தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை

0 6954
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை

மிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,59,590 ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 16,488 பேரில் 85.75 சதவீதத்தினர் இந்த ஆறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பாதிப்பு அதிகம் உள்ள மாநில அதிகாரிகளுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments