தமிழ்நாடு முழுவதும், இன்று 3ஆவது நாளாக நீடித்து வந்த போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

0 11094
தமிழ்நாடு முழுவதும், இன்று 3ஆவது நாளாக நீடித்து வந்த போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

மிழ்நாடு முழுவதும், 3ஆவது நாளாக நடைபெற்று வந்த போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலத்தில், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது, போக்குவரத்துத்துறை அதிகாரிகள், தொழிற்சங்கங்கள் இடையே உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடரும் என்றும், தேர்தலை காரணம் காட்டி கைவிடப்பட மாட்டாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments