வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆர்எஸ் பாரதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி மனு - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

0 1495
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆர்எஸ் பாரதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி மனு - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கருத்தரங்கில் ஆர்.எஸ்.பாரதி பேசியது பட்டியல் இனத்தாரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார்.

ஆர்.எஸ்.பாரதியின் மொத்தப் பேச்சும் பட்டியலின மக்களுக்கும் நீதிபதிகளுக்கும் எதிராக உள்ளதாகவும், உயர் பதவிகளை வகிக்கப் பட்டியலின மக்களுக்குத் தகுதியில்லை என்ற பொருள்படும்படி பேசியுள்ளதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறிய நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

வழக்கை நாள்தோறும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments