அதிமுக - பாமக இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தகவல்

0 2301
அதிமுக - பாமக இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தகவல்

அதிமுக - பா.ம.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், அதிமுக - பா.ம.க. இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை, சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறுகிறது.

பா.ம.க.வின் நீண்ட கால கோரிக்கையான வன்னியர்களுக்கு பத்தரை சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments