சென்னையில் மூன்று நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

சென்னையில் மூன்று நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
மூன்று நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 20 காசுகளுக்கும், டீசல் விலை 86 ரூபாய் 53 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மூன்று நாட்களாக உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் விலை 22 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக அளவாக ஜெய்ப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 97 ரூபாய் 72 காசுகளுக்கும், டீசல் 89 ரூபாய் 98 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.
Comments