பிரேசில் நாட்டிற்கு 2 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள்: பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

0 1278
பிரேசில் நாட்டிற்கு 2 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள்: பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

பிரேசில் நாட்டிற்கு 2 கோடி டோஸ், கோவாக்சின் தடுப்பூசி மருந்தை வழங்க உள்ளதாக, பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து, முழுக்க, முழுக்க இந்தியாவிலேயே, கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை கண்டறிந்து, பாரத் பயோடெக் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் போடப்படும் 2 தடுப்பூசிகளில் ஒன்று, கோவாக்சின் ஆகும்.

இந்நிலையில், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், வருகிற செப்டம்பர் மாதத்திற்குள், 2 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை வழங்க, பிரேசிலுடன் ஒப்பந்தம் செய்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments