வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு: 40 ஆண்டு கால கனவு நிறைவேறியதில் ஆனந்தக் கண்ணீரில் நனைகிறேன்- ராமதாஸ் அறிக்கை

0 5759
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு: 40 ஆண்டு கால கனவு நிறைவேறியதில் ஆனந்தக் கண்ணீரில் நனைகிறேன்- ராமதாஸ் அறிக்கை

ன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 40 ஆண்டு கால கனவு நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சியுடன் ஆனந்தக் கண்ணீரில் நனைவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு உரிய பிரநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

வன்னியர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு என்ற இலக்கையும், சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி வென்றெடுக்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments