சேலம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 அரசு மருத்துவக்கல்லூரி டீன்கள் மாற்றம்

சேலம், செங்கல்பட்டு, திருவாரூர், கள்ளக்குறிச்சி உட்பட 6 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் டீன்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம், செங்கல்பட்டு, திருவாரூர், கள்ளக்குறிச்சி உட்பட 6 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் டீன்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக, டாக்டர் முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக டாக்டர் பாலாஜிநாதன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி, முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாக டாக்டர் நிர்மலாவும், தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்வி இயக்குனரகத்தின், தேர்தல் கமிட்டின், கூடுதல் இயக்குநர், செயலராக சாந்திமலர் நியமிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
Comments