பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்த விவகாரம்; உள்துறைச் செயலர், டிஜிபி பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

0 2094

பாலியல் தொல்லை குறித்துப் புகார் அளிக்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி தடுத்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் பதில் அளிக்க உள்துறைச் செயலருக்கும் காவல்துறைத் தலைமை இயக்குநருக்கும் மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரான பெண் ஐபிஎஸ் அதிகாரி, சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஸ்தாஸ் தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக கூறிப் புகார் அளித்துள்ளார்.

புகார் அளிக்கச் சென்னைக்கு வந்தபோது செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் தன்னை வழிமறித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், இந்த விவகாரத்தில் சமாதானமாகச் சென்றுவிடலாம் எனக் கூறியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து விசாரிக்கக் குழு அமைத்துள்ளதுடன்,ராஜேஸ்தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக வழக்கை எடுத்துக் கொண்டது. இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க உள்துறைச் செயலருக்கும், காவல்துறைத் தலைமை இயக்குநருக்கும் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments