சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் தொழிலாளர்கள் 5 பேர் பலி

0 2338
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் தொழிலாளர்கள் 5 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், அந்த ஆலையின் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

காளையார்குறிச்சியில் உள்ள தங்கராஜ் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான ஆலையில் பட்டாசு தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பணி நிறைவடைய அரைமணிநேரமே இருந்த நிலையில், முனைமருந்து செலுத்தும் போது ஏற்பட்ட உராய்வினால், உருவான தீப்பொறி,பட்டாசுகள் மீது பற்றி வெடித்துச் சிதறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாயின. விபத்தில் 2 பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்‍. காயமடைந்த 16 பேர் சிவகாசி மற்றும் மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்‍.

இந்நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் தங்கராஜ் பாண்டியன் மற்றும் போர்மேன் ஜெயபால் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments