அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான தேர்வு முறையில் மாற்றம்..! ஜோ பைடன் அறிவிப்பு

அமெரிக்காவில் குடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் குடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அந்நாட்டில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர்கள் குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும்.
டிரம்ப் தலைமையிலான நிர்வாகம்,தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கையை 100லில் இருந்து 128 ஆக உயர்த்தியது. அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் குடியுரிமை தேர்வில் முந்தைய நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி இனி 2008-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்வு முறைகள் மீண்டும் தொடரும் என அறிவித்துள்ளார்.
Comments