27 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் ராகுல் காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம்

0 1343
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3-வது கட்டமாக தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3-வது கட்டமாக தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

அவர் 27-ந்தேதி முதல் மார்ச் 1-ந்தேதி வரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அன்று தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், நாங்குநேரி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்வார் என்றும், 28-ந்தேதி பாளையங்கோட்டை, நெல்லை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை கடையநல்லூர், புளியங்குடி, தென்காசி, கடையம், அம்பை, சேரன்மகாதேவி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ஊர்களில் ஆதரவு திரட்டுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1-ந்தேதி குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments