தமிழகத்தின் நலனை காக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்: கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி

0 2939
தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை

கோயம்புத்தூரில் பாஜக சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை

கோயம்புத்தூர் கூட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர்

தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்: பிரதமர் மோடி

எனது மதிப்பிற்குரிய கொங்கு மண்டல மக்கள் செயல் ஆற்றலுக்குரியவர்கள்: பிரதமர் மோடி

கொங்கு மண்டலத்தில் உள்ள பிரம்மாண்ட ஆலயங்கள், உலகளவில் மக்களை சுண்டியிழுக்கின்றன: பிரதமர் மோடி

நாட்டில் உள்ள மக்கள், வளர்ச்சி அரசியலை விரும்புகின்றனர் என்பதை, கடந்த தேர்தல்கள் உணர்த்தியுள்ளன: பிரதமர் மோடி

தமிழ்நாட்டில், சட்டமன்ற தேர்தல் மூலம், புதிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்: பிரதமர் மோடி

வெற்றிவேல், வீர வேல் எனக் கூறி தனது பரப்புரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி

வணக்கம் தமிழ்நாடு, வணக்கம் கோயம்புத்தூர் என தமிழில் கூறி, பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை

தே.ஜ.கூட்டணி மத்திய அரசும், மாநில அரசும், கூட்டுறவு கூட்டாட்சி என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன

"தொழில்துறைக்கு தொடர்ந்து உதவிடுவோம்"

கோயம்புத்தூர், சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என உறுதியளிக்கிறேன்

முத்ரா உள்ளிட்ட அவசரகால கடன் திட்டங்கள் மூலம், சிறு, குறு தொழில்களுக்கு உதவி

தமிழ்நாட்டில், 3.5 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி

கோயம்புத்தூரில் 25,000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் கடனுதவி திட்டங்களால் பயன்பெற்றுள்ளன

சாம்பியன் என்ற இணையதளம் நிறுவப்பட்டு, சிறு, குறு தொழில்களுக்கான குறைகள் களையப்படுகின்றன

எஃகு பொருட்கள் மீதான கலால் வரி குறைப்பு, ஸ்கிராப்புகளுக்கு வரி விலக்கு, பட்ஜெட்டில் அறிவிப்பு

ஜவுளித்துறையை வலிமையாக்க உறுதி.!

ஜவுளித்துறையினர் பயன்பெறும் வகையில், கைத்தறி தொழிலாளர் பயன்பெறும் வகையில், உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல், 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப்பூங்காக்கள் நிறுவப்படும் என மீண்டும் உறுதி கூறுகிறேன்

"வேளாண் பெருங்குடிகளின் நலன் காக்கப்படும்"

நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை மேற்கொள்ளும் வேளாண் பெருங்குடி மக்களின் நலனில் அக்கறை

சிறு விவசாயிகளும் பயன்பெறும் வகையில், அவர்கள் பாதிக்கப்படாத வகையில், கடனுதவி திட்டங்கள்

இடைத்தரகர்கள் குறுக்கீடுகள் மூலம் சிறு விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் தொடர் நடவடிக்கைகள்

பிரதமரின் உழவன் உதவித் திட்டம் மூலம், 2 ஆண்டுகளில், 11 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்

கொப்பரைத் தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது

நெல், கோதுமை, கரும்பு மட்டுமின்றி, பெரும்பாலான வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்

தமிழ்நாட்டில் 14 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டம் மூலம் குழாய் மூலம் குடிநீர் விநியோகம்

மத்திய அரசின் நீராதார திட்டமான ஜல் ஜீவன் திட்டம் மூலம், தமிழ்நாட்டு ஏராளமான பலன்களை பெற்றுள்ளது

தமிழ்நாடு பண்பாட்டில் பெருமைமிகுந்து விளங்கும் மாநிலமாகும்; உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி

தமிழர்களால் கொண்டாடப்படும் திருவிழாக்கள் உலகளவில் புகழ்பெற்றவை ஆகும்: பிரதமர்

பொறியியல், மருத்துவக் கல்வி ஆகியவற்றை தாய்மொழியில் பயில நடவடிக்கை எடுத்திருக்கிறோம்: பிரதமர்

எதிர்க்கட்சிகள் மீது மோடி விமர்சனம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி என்பது கருணை மிகுந்த ஆட்சியாகும்: பிரதமர்

ஆனால், எதிர்க்கட்சிகள் கருணையற்ற ஆட்சியை நடத்தவே விரும்புகின்றனர்: பிரதமர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments