நான் தமிழகத்தை காப்பாற்றக்கூடாதா..? - வில்லனின் புதிய கட்சி

0 1877

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தமிழ்த் தேசியப் புலிகள் கட்சியை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான், தமிழகத்தை காப்பாற்றவே புதிய கட்சி தொடங்கியதாக கூறினார். 

நாம் தமிழர் கட்சியில் இருந்து அதிரடி காட்டிய மன்சூர் அலிகான், 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திண்டுக்கல்லில் போட்டியிட்டு 50 ஆயிரம் வாக்குகளை பெற்று தோல்வியுற்றார். மொழி மற்றும் இலங்கை தமிழகர்கள் மீது பற்றுக் கொண்ட மன்சூர் அலிக்கான் வரும் சட்டமன்ற தேர்தலில் சென்னையில் குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிட முனைந்ததாகவும் அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. 

அந்த கட்சியிலிருந்து விலகிய மனசூர் அலிகான் ”தமிழ் தேசிய புலிகள்” என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவின் “B"  டீமா என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கிண்டலுடன் கூடிய சிரிப்பை வெளிப்படுத்திய மன்சூர் அலிகான், A-B மட்டும் இல்லை Z வரை எங்கள் டீம் தான் என்றதுடன், இனி நாங்கள் சொல்றது தான் அரசியல் என்றார். 

நாடகமாடி தமிழகத்திற்கு திமுக நயவஞ்சகம் செய்து வருவதால் உண்டான கொதிப்பால் தனியாக கட்சி தொடங்கி மக்களை காக்க முன்வந்துள்ளதாகவும் மன்சூர் அலி கூறினார். தற்பொழுது தமிழகத்திற்கு திராவிடம் தேவையில்லை என்ற மன்சூர் அலி தெலுங்கர், கன்னடர் மற்றும் மலையாளி என யாரும் தமிழகர்கள் ஆளக்கூடாது என கூறினார். ஸ்டாலின் மட்டுமின்றி அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்தும் போட்டியிட தயார் என சூசகமாக கூறிய மன்சூர் அலி,  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என சூலுரைத்தார். 

வேற்று மொழியையும், மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆட்சி புரிந்த நிலையில் தமிழ்தேசியம் குறித்து நான் பேசக்கூடாதா..? நான் தமிழகத்தை காப்பாற்றக்கூடாதா..? எனவும் கேள்வி எழுப்பினார்.  மன்சூர் அலிகானின் இந்த புதிய அரசியல் பிரவேசம் அவர் எந்த அளவுக்கு அரசியல் கட்சித் தலைவராக உருவெடுப்பார் என்பதை போகப்போகத்தான் தெரிய வரும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments