ஆல்பாஸ் என்றாலுமே மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

0 63525
9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் அறிவித்துள்ளார். இதனால், மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரலாமா வேண்டாமா என கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் கற்றல் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், தேர்வுகள் மட்டும்தான் ரத்து செய்யப்பட்டுள்ளதே தவிர, வகுப்புகள் வழக்கம்போல நடைபெறும் என்றும், மாணவர்கள் பள்ளிக்கு முறையாக வரவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments