ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகுப்வாரா வனப்பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய பதிலடித் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Comments