வியாபாரம் செய்வது, வர்த்தகம் புரிவது நாட்டை ஆளும் அரசின் வேலை அல்ல - பிரதமர் மோடி திட்டவட்டம்

0 4414

நாட்டில், வியாபாரம் செய்வது, வர்த்தகம் புரிவது, ஆளும் அரசாங்கத்தின் வேலை அல்ல என, பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தொழில் நிறுவனங்களை பாதுகாப்பது, வணிகங்களை முழுமையாக ஆதரிப்பது என்பதே அரசாங்கத்தின் முழுமுதற் கடைமையாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அதைவிடுத்து, தொழில் நிறுவனங்களை நிறுவுவது, அதை நடத்துவது அரசின் வேலை அல்ல என்றும், அதற்கு அவசியமோ அல்லது சாத்தியமோ இல்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை விற்று பணமாக்குவது, அல்லது, தனியார்மயப்படுத்துவது என்ற, தமது தலைமையிலான மத்திய அரசின் முடிவு, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் மேம்பாட்டிற்கு உதவும் முடிவு என்றும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments