துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம்..! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பசுமையை போற்ற புதிய நடவடிக்கை

துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம்..! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பசுமையை போற்ற புதிய நடவடிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த கோவிலில் தரிசனம் செய்யும் அனைவருக்கும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க பாலித்தீன் பைகள் நிறுத்தப்பட்டு, துணிப்பைகளில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பசுமையை போற்றும் வகையில் துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காலியான பைகளை மண்ணில் போடும் போது துளசி விதைகள் செடிகளாக முளைக்கும் வகையில் தேவஸ் தான நிர்வாகம் பச்சை நிற பையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Comments