அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி வாரத்திற்கு 3 முட்டைகள்: புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு

0 1842
அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி வாரத்திற்கு 3 முட்டைகள்: புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு

புதுச்சேரியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி வாரத்திற்கு 3 முட்டைகள் வழங்கப்படும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டு உள்ளார்.

புதுச்சேரியில் மொத்தமுள்ள 855 அங்கன்வாடி மையங்களில் 6 மாத குழந்தை முதல் 6 வயது குழந்தை வர, மதிய உணவில் புரசத்சத்து இருக்க வேண்டுமென்பதற்காக வாரத்திற்கு ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்தது.

இனி, வாரத்திற்கு 3 முட்டை வழங்கப்படும் என வெளியிடப்பட்ட அறிவிப்பால் அங்கன்வாடிகளில் 29 ஆயிரத்து 846 குழந்தைகள் பயன்பெறுவார்கள்.

ஆண்டுக்கு கூடுதலாக ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் செலவாகும் என்று புதுவை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments