உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் : அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்!

0 1857

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் முதல் போட்டியாக, இந்த ஆட்டம் நடைபெறுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், மைதானத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார்.

நவீன வசதிகளுடன் 63 ஏக்கர் பரப்பளவில் அகமதாபாத்தில் பிரம்மாண்டமாக மைதானம் கட்டப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட்ட மைதானத்தில் இன்று நடக்கும் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments