அதிமுக விருப்ப மனு விநியோகம் : எடப்பாடி தொகுதிக்கு இபிஎஸ், போடி தொகுதிக்கு ஓபிஎஸ் விருப்ப மனு

0 2121

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளது. எடப்பாடி தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் பழனிசாமியும், போடிநாயக்கனூர்த் தொகுதியில் போட்டியிடத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர். 

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்கலையும் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தொடக்கி வைத்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் பழனிசாமியும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் விருப்பம் தெரிவிக்கும் மனுக்களை அளித்தனர்.

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும், தங்கமணி குமாரபாளையத்திலும், செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்திலும், சீனிவாசன் திண்டுக்கல்லிலும் போட்டியிடுவதற்காக விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments