மகாராஷ்டிராவில் ஆற்றில் மணல் கடத்தியதாக ரூ.1.3 கோடி மதிப்புள்ள 14 படகுகள் அழிப்பு

0 518
மகாராஷ்டிராவில் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட 14 படகுகளை போலீசார் அழித்தனர்.

மகாராஷ்டிராவில் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட 14 படகுகளை போலீசார் அழித்தனர்.

புனே மாவட்டத்தில் உள்ள பிமா ஆற்றுப்படுகையில் உள்ள தவுண்ட், ஷிரூர் மற்றும் இந்தபூர் பகுதியில் தரமான மணல் கிடைப்பதால் இங்கு சட்டவிரோதமாக ஏராளமான சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இயற்கை வளம் அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து புனே மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து சோதனை நடத்தினர்.

2 வாரங்களாக நடத்தப்பட்ட சோதனையில் 80க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 படகுகளை கைப்பற்றி அழித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments