செங்கொடி இருந்தால் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் கடத்தலாம்; கேரள அரசு மீது ராகுல்காந்தி கடும் விமர்சனம்

செங்கொடியை கையில் பிடித்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தங்கம் கடத்தலாம் என்று இடதுசாரி கேரள அரசு மீது காங்கிரஸ் எம்பி.
செங்கொடியை கையில் பிடித்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தங்கம் கடத்தலாம் என்று இடதுசாரி கேரள அரசு மீது காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தி கடுமையான விமர்சனம் வைத்தார்.
வயநாடு தொகுதிக்கு சென்ற ராகுல் காந்தி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.அப்போது பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசை அவர் கடுமையாக விமர்சித்தார்.
அரசுப் பணிகளில் கட்சிக்காரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக ராகுல் காந்தி சாடினார்.கேரளாவில் படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
Comments