உத்தர பிரதேசத்தில் கார் மீது எண்ணெய் லாரி மோதி விபத்து: 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் கார் மீது எண்ணெய் லாரி மோதி விபத்து: 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவின் யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து நேரிட்டதில் இரண்டு பெண்கள் உள்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்கள் பயணம் செய்த கார் எதிரே வந்த எண்ணெய் டேங்கர் லாரியுடன் மோதியதில் இந்த விபத்து நேரிட்டது. போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments