கர்ணனை கையோடு கூட்டி வந்தாச்சு…! இசை திருடர்கள் லைன்ல வாங்க..!

0 181870
கர்ணனை கையோடு கூட்டி வந்தாச்சு…! இசை திருடர்கள் லைன்ல வாங்க..!

கண்டாவரச்சொல்லுங்க என்ற தனது தந்தையின் பாடலை பயன்படுத்தியதற்கு எந்த ஒரு நிதியும் தரவில்லை என்று ஒரிஜினல் இசையமைப்பாளர் தேக்கம் பட்டி சுந்தர்ராஜனின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். மாரி செல்வராஜின் வேண்டுகோளை ஏற்று கர்ணனை கையோடு கூட்டி வந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

ஒரிஜினல் பாடகரு பெத்த புள்ள...! பரிதவித்து நிக்கயில...! அப்பன் பாட்ட திருடும் எவருக்கும்... இவர்கள கண்டு கொள்ள நேரமில்லை..! 

சூப்பர் சிங்கர்ல சுட்டதற்கும், சினிமாவில் காப்பி அடித்ததற்கும் நிதியேதும் கொடுக்கவில்லை..! தங்கள் உரிமையை கேட்பதற்கும் இசை உலகில் நாதியில்லை..!

அப்பாவோட பாட்டை வச்சி டிஜிட்டலில் கோடிகள் சம்பாதிக்கும் ராம்ஜியும் கண்டுக்கல... ஆனால் கர்ணனை அழைக்க மாரி செல்வராஜ் நன்றின்னு போட்டதற்கே தங்களுக்கு சந்தோஷம் தாளவில்லை..! என்று ஆதங்கத்தையும் ஆனந்தமாக வெளிப்படுத்தும் இவர்தான் தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் மகன் கர்ணன்..!

தேக்கம் பட்டி சுந்தர்ராஜனின், புளியங்கொட்ட பல்லழகி, சினிமாவுக்காக வைரமுத்துவின் பேனாவால், சிற்பியின் இசையில் மொச்சகொட்ட பல்லழகியானது

யுவனின் இசையில் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டடித்த பருத்திவீரன் படத்தில் இடம் பெற்ற டங்கா டுங்கா தவுட்டுகாரி பாடல் தேகம்பட்டி சுந்தராஜனிடம் இருந்து அனுமதி பெறாமல் சுடப்பட்டது..!

ராம்ஜி ஆடியோ தயாரித்த உடும்பன் படத்தில் அங்கே இடி முழங்குது என்ற கருப்பசாமி பாடலை அப்படியே பயன்படுத்தினர்

இந்த நிலையில் கர்ணனை கையோடு கூட்டி வருவதற்கு இயக்குனர் மாரி செல்வராஜின் ஆலோசனையில் நன்றி கார்டுடன் சந்தோஷ் நாராயணனால் எடுத்தாளப்பட்ட கண்டாவரச்சொல்லுங்க பாடல் யூடியூப்பில் ஹிட்டான நிலையில், தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் குடும்பத்தினர் விழித்துக் கொண்டுள்ளனர்.

தங்கள் தந்தை இறந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் அவர் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்களை வைத்திருக்கும் ராம்ஜி ஆடியோ நிர்வாகம் தங்கள் அனுமதியின்றி டிஜிட்டலிலும், திரைதுறையிலும் பயன்படுத்த அனுமதி வழங்கி பல கோடிகள் சம்பாதிப்பதாகவும் ஆனால் தாங்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் தவிப்பதாகவும் குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர்

திரை இசைக்காக தங்கள் தந்தையின் பாடலை திருடி பயன்படுத்தும் சில இசையமைப்பாளர்களுக்கு எதிராக எப்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்வது ? என்று தெரியாமல் தாங்கள் தவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்

இளையராஜா எப்படி தனது பாடல்களை பயன்படுத்த தனது அனுமதியும் குறிப்பிட்ட அளவு பணமும் வேண்டும் என சொல்கிறாரோ அதே பாணியில் தங்கள் தந்தையின் பாடலை பயன்படுத்த தங்களிடம் அனுமதி பெறவேண்டும் என்று இவர்களும் அறிவுசார் சொத்துரிமை சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டால் நிஜ கர்ணனுக்கு நீதி மட்டுமல்ல உரிய நிதியும் கிடைக்கும் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

தேக்கம் பட்டி சுந்தர்ராஜனின் பாடல்களை கைவசம் வைத்து சம்பாதித்துக் கொண்டிருக்கும், ராம்ஜி ஆடியோ பங்குதாரரான ஜெகன்நாதன் தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் குடும்பத்தினர் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதில் கூற இயலாமல் திணறினார்.

கர்ணன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜிடம் இது குறித்து தெரிவித்த அடுத்த வினாடியே , தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் மகன் கர்ணனை செல்போனில் அழைத்து பேசியதோடு, தங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அழையுங்கள் என்று வாக்குறுதி அளித்து நெகிழச்செய்துள்ளார்.

கவிஞருக்கு கொடுக்கும் பணத்தை தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் குடும்பத்தினரிடம் கொடுத்து அவரது உருவாக்கத்தில் ஹிட்டான அனைத்து பாடல்களையும் மெருகேற்றி திரைப்படத்தில் கொண்டு வந்தால் கிராமத்து இசையோடு அதனை கருவாக்கி உருவாக்கிய அவரது குடும்பமும் கவலையின்றி வாழும்..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments