சென்னை ராயபுரத்தில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 280 சவரன் தங்க நகைகள் மாயம் என புகார்

0 951

சென்னை ராயபுரத்தில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 280 சவரன் தங்க நகை காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ராயபுரம் கிரேஸ் கார்டன் 5 வது தெருவை சேர்ந்த  ராஜா என்பவர் ராயபுரம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், கடந்த ஜூன் மாதம் தனது மனைவி  280 சவரன் நகையை வீட்டிலுள்ள கபோர்ட்டில் பூட்டி வைத்ததாகவும், தற்போது அதனை திறந்து பார்த்த போது அந்த நகையை காணவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதம் குடும்பத்தோடு சுற்றுலா சென்றதால் அந்த நேரத்தில் தான் நகை திருடு போயிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புகார் குறித்து ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments