தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 1847
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்கிழக்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில், கர்நாடகம், கேரள கடலோர பகுதிகளில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி நிலவுவதாக அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 89.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 71.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments