அர்ஜூனா பீரங்கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை மற்றும் ஆருத்ரா ரேடார்களை, கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்

0 765
அர்ஜூனா பீரங்கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை மற்றும் ஆருத்ரா ரேடார்களை, கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்

சென்னையை அடுத்த ஆவடியில் தயாரிக்கப்படும் அர்ஜூனா பீரங்கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை மற்றும் ஆருத்ரா ரேடார்களை, இந்திய இராணுவத்திற்கு கொள்முதல் செய்ய, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள், 6000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தலா 58 டன் எடையுள்ள, 118 அர்ஜூன் மார்க்1-ஏ பீரங்கிகளை, 30 மாதங்களுக்குள் தயாரித்து வழங்க, ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றனர்.

மேலும், உள்நாட்டிலேயே தயாரிப்பான நாக் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும், ஆருத்ரா மத்திய ரக ரேடார் அமைப்புகளையும், இராணுவத்திற்கு கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments