ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு உயிர்ப்பிக்கும் குகைமனிதன்... புதிய ஆய்வில் வியப்பான தகவல் !

0 19968

ல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த மனிதனின் சகோதர இனமான நியாண்டர்தல்களின் (Neanderthal) டி.என்.ஏ. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் திறன் பெற்றுள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்படுகிறது.

2019ம் ஆண்டு உணரப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதிலும் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டறிவதிலும், அதனை முற்றிலுமாக அழிக்கும் நடவடிக்கையிலும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மரபணு மாற்ற வரிசைகளை கொண்டும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போன்ற ஆய்வு ஒன்றில் தான் மனித இனம் தோற்றுவதற்கு முன்பாக வாழ்ந்த மனிதனின் சதோதர இனம் என்று அழைக்கப்படும் நியாண்டர்தல்களின் மரபணுவுக்கும் தற்பொழுதுள்ள கொரோனா தொற்றுக்குமான ரகசியம் கண்டறியப்பட்டுள்ளது.

மனித இனம் எப்படித் தோன்றியது? என்ற கேள்விக்கு விடை தெரியாத ஆரம்ப காலகட்டங்களில் குரங்கிலிருந்து மனித இனம் தோன்றியதாக கூறப்படும் காலத்தில் தான் இந்த நியாண்டர்தல் மனிதர்களும் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களை வரலாற்று ஆய்வுகள் குகை மனிதர்கள் என்றும், மனிதனின் சதோதர இனம் என்றும் கூறுகிறது. நியாண்டர்தல்கள் சகோதர இனமாக இருந்தாலும், காலச்சூழல் போட்டியில் ஹோமசெப்பியன்கள் எனப்படும் ஆதிமனிதர்களால் அழிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சுமார் ஒன்றை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தல்களின் மரபணுக்கள் நவீனக்கால மனிதனுடன் தொடர்புடையது என்பது அறிவியல் உலகில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தற்பொழுது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் பாதிப்பை 22 சதவீதம் வரை குறைக்கும் திறன் பழங்கால மனிதனான நியாண்டர்தல்களின் டி.என்.ஏவில் இருப்பது தெரிய வந்துள்ளது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் மரபியல் மாற்றம் நியாண்டர்தல்களின் டி.என்.ஏ.வில் இருப்பதை தொடர்ந்து அவர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் ஐரோப்பா மற்றும் ஆசிய பகுதி வாழ் மக்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நியாண்டர்தல்களின் மரபணு கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் திறன் பெற்றுள்ளதாக ஜெர்மனியை சேர்ந்த பரிணாம மானுடவியல் ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.

இந்த நிலையில் 70 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சைபீரியா பகுதியையும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் பழமையான டெனிசோவா குகைப்பகுதியையும், 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குரோஷியா பகுதியையும் சேர்ந்த 4 நியாண்டர்தல்களின் எலும்புக்கூடுகளின் டி.என்.ஏ. ஆய்வு செய்யப்பட்டது. அதில், 4 டி.என்.ஏ மாதிரிகளும் ஒரே மாதிரியான நோய் எதிர்ப்பு மரபணு வரிசையை பெற்றிருப்பது தெரியவந்தது.

சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா மற்றும் ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் நியாண்டர்தல்கள் வாழ்ந்திருக்கலாம் என கூறும் ஆராய்ச்சியாளர்கள், அந்த பகுதிகளை சேர்ந்த வம்சாவளியினரிடம் 2% சதவீதம் நியாண்டர்தல்களின் டி.என்.ஏ.வின் தாக்கம் இருப்பதாக கணித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, ஐரோப்பா மற்றும் ஆசிய பகுதிகளை சேர்ந்த 2,200 பேரிடம் பரிசோதனை மேற்கொண்டதில், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் மரபணு தொகுதி அவர்களது உடலில் இருப்பது கண்டறியப்பட்டது.

ஆதிமனிதனின் ஆற்றல் மிகுந்த மரபணு தற்காலத்தில் உள்ள மனித இனத்தின் பாதுகாப்பிற்கு உதவுகிறது என்ற ஆய்வு ஆராய்ச்சியாளர்களின் நம்ப முடியாத அதிசயமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments