மனைவியின் சடலத்தைப் பார்க்க வந்த கணவன் தாக்கப்பட்ட விவகாரம் : தனது தந்தைதான் தாயின் கழுத்தை நெறித்துக் கொன்றதாகக் கூறும் மகன்

0 51293
மனைவியின் சடலத்தைப் பார்க்க வந்த கணவன் தாக்கப்பட்ட விவகாரம் : தனது தந்தைதான் தாயின் கழுத்தை நெறித்துக் கொன்றதாகக் கூறும் மகன்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மனைவியின் சடலத்தை பார்க்க வந்த கணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், தனது தந்தைதான் தாயின் கழுத்தை நெறித்துக் கொன்றார் என அவரது 4 வயது மகன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்றம்பள்ளியைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணின் சடலம் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டது.

மனைவியின் சடலத்தைப் பார்க்க வந்த கணவர் யோகாநாத்தை, பெண்ணின் உறவினர்கள் சுற்றிவளைத்து சரமாரியாகத் தாக்கினர்.

சம்பவத்தன்று தந்தைதான் தாயை கழுத்தை நெறித்துக் கொன்றதாக அவர்களது 4 வயது மகனும் மழலைக் குரலில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments