வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கண்டிப்பான விதிமுறைகள் அமல்

0 1005
வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கண்டிப்பான விதிமுறைகள் அமல்

ளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவோருக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால், கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வந்தால் சென்னை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவத் தொடங்கியதால், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா, ஓமன், கத்தார், வியட்நாம், இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments