மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் சிலை வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு

0 334
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் சிலை வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு

துரையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைப்பது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சிம்மக்கல்லில் கலைஞர் கருணாநிதியின் சிலை வைக்க வேண்டுமென்ற திமுகவினரின் கோரிக்கையை அடுத்து அரசாணை வழங்கப்பட்டு, சிலையும் நிறுவப்பட்டது.

பொது இடங்களில் சிலை வைக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் விதியை மீறியிருப்பதை சுட்டிக்காட்டி, அரசாணையை ரத்துசெய்யக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலை தொடர்பான மற்றொரு வழக்குடன் இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments