குடியரசு தினத்தன்று ஸ்டென்சில் ஆர்ட் ஓவியத்தை பரிசாக வழங்கிய 14 வயது சிறுவனை பாராட்டி பிரதமர் மோடி கடிதம்

0 766
குடியரசு தினத்தன்று ஸ்டென்சில் ஆர்ட் ஓவியத்தை பரிசாக வழங்கிய 14 வயது சிறுவனை பாராட்டி பிரதமர் மோடி கடிதம்

குடியரசு தினத்தன்று ஸ்டென்சில் (stencil) ஆர்ட் ஓவியத்தை, பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கிய 14 வயது சிறுவன் சரண் சசிக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், தங்களின் ஓவியம் தேசத்தின் மீதான அன்பையும் பாசத்தையும் பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ள மோடி, இன்னும் பல அழகான கருத்துகளுடன் படங்களை வரையவும், கல்வித்துறையில் சிறந்து விளங்கவும் தனது வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனது ஓவியத்தை பாராட்டிய பிரதமர் மோடிக்கு மிக்க நன்றி என ட்விட்டரில் பதிலளித்துள்ள சரண், தன்னை போன்று வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு இதுபோன்ற வாழ்த்துக்கடிதம் உத்வேகம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments