தமிழகத்தில் யானைகள் வளர்ப்பு தொடர்பான புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுக்க 8 வாரம் அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் யானைகள் வளர்ப்பு தொடர்பான புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுக்க 8 வாரம் அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் தனியாரிடமும், கோயில்களிலும் வளர்க்கப்படும் யானைகள் முறையாக பராமரிக்கப்படும் வகையில் புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை எட்டு வாரத்திற்குள் வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மேட்டுப்பாளையம் முகாமில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் யானை சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, இது போன்று யானைகளை சித்திரவதை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இவர்களுக்கு கருணை காட்ட முடியாது எனவும் தெரிவித்தார்.
விலங்குகளிடம் கருணை காட்டாத ஒருவனுக்கு நாமும் கருணை காட்டக் கூடாது என தெரிவித்த நீதிபதிகள், தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
Comments