ஆஸி. செய்தி பக்கங்கள் மீதான தடையை விலக்கி, ஊடகங்களுக்கு பணம் வழங்க ஃபேஸ்புக் சம்மதம்

0 1056
ஊடக விதிகளை திருத்தி அமைக்க ஆஸ்திரேலிய அரசு ஒப்புக்கொண்டதை தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம், ஆஸ்திரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த சர்ச்சைக்குரிய தடையை விலக்கிக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.

ஊடக விதிகளை திருத்தி அமைக்க ஆஸ்திரேலிய அரசு ஒப்புக்கொண்டதை தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம், ஆஸ்திரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த சர்ச்சைக்குரிய தடையை விலக்கிக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படும் செய்திகளுக்கு பேஸ்புக் நிறுவனம் செய்தி நிறுவனங்களுககு பணம் செலுத்துவது சட்டபூர்வ கட்டாயம் என்ற ஆஸ்திரேலிய அரசின் விதிகளுக்கு ஃபேஸ்புக் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடை நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இந்த நிலையில் இருதரப்பும் பேசி சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதால் , பொதுநலன் சார்ந்த ஊடக செய்திகள் இனி ஃபேஸ்புக்கில் வெளியாகும் என அதன் ஆஸ்திரேலிய பிரிவு தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஏற்கனவே தனது நிலையில் இருந்து இறங்கி வந்து, ஊடக செய்திகளுக்கு பணம் வழங்க தயார் என தெரிவித்துள்ளது.

இப்போது எட்டப்பட்டுள்ள உடன்பாட்டின்படி, ஃபேஸ்புக்கும், கூகுளும், தங்களது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கு உள்ளூர் ஊடக நிறுவனங்களுக்கு பணம் செலுத்தும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments