தமிழக இடைக்கால பட்ஜெட்: முழு விவரம்

0 6243
தமிழக இடைக்கால பட்ஜெட்: முழு விவரம்


இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் ஓபிஎஸ்

11வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் ஓபிஎஸ்

 எதிர்கட்சிகளின் கணிப்புகளை பொய்யாக்கி ஐந்து வருடங்களை அதிமுக அரசு பூர்த்தி செய்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உலக அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது

image

மத்திய அரசின் நல் ஆளுமை விருதை தமிழக அரசு பெற்றுள்ளது

ஒட்டு மொத்த செயல் திறன் மிக்க அரசாக தமிழக அரசை 3வது ஆண்டாக இந்தியா டுடே தேர்வு செய்துள்ளது

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தனியார் நிறுவனங்கள் ஏராளமானவை முன்வருகின்றன

கொரோனா காலத்திலும் தொழில் முதலீட்டுகளை ஈர்த்த மாநிலமாக தமிழகம் உள்ளது

எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான நிர்வாகத்தால் கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் வந்துள்ளது

சிறப்பான நிர்வாகி எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ்

கொரோனாவை எதிர்கொண்ட மாநிலங்களில் தமிழகம் அனைவருக்கும் முன்னோடியாக உள்ளது

image

கொரோனாவுக்கு ஆளானவர்களில் 2 விழுக்காட்டினர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது

கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையில் ரூ.13,352 கோடி செலவு

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை

image

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் இயற்கையாக உயிரிழந்தால் ரூ.2லட்சம் காப்பீட்டுத் தொகை

காவல்துறையை நவீனமயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு

காவல்துறைக்கு வரும் நிதி ஆண்டிற்கு ரூ.9567.93 கோடி ஒதுக்கீடு

image

தீயணைப்புத்துறைக்கு ரூ.436.68 கோடி ஒதுக்கீடு

நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1437.82 கோடி ஒதுக்கீடு

பயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5000 கோடி ஒதுக்கீடு

image

புதிய பேருந்துகள் வாங்க போக்குவரத்து துறைக்கு ரூ.623 கோடி ஒதுக்கீடு

இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.11982 கோடி ஒதுக்கீடு

மீன்வளத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.580.97 கோடி ஒதுக்கீடு

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத்திட்டப்பணிகள் 2022 மார்ச் மாதம் முடிக்கப்படும்

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.6941 கோடிக்கு கொள்கை அளவில் ஒப்புதல்

image

40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3016 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசின் நிதியாக ரூ.3548 கோடி ஒதுக்கீடு

image

இடைக்கால பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.22,218 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் (நகர்புறம்) ரூ.3700 கோடி ஒதுக்கீடு

சென்னையில் போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.3140 கோடியில் திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.18,750 கோடி ஒதுக்கீடு

image

அடுத்த சில ஆண்டுகளில் 2000 மின்சாரப் பேருந்துகள் உட்பட, 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்

image

ரூ.6683 கோடி மதிப்பீட்டில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தை அமைக்க விரிவான சாத்தியக் கூறு அறிக்கை-ஆய்வு

image

6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும்

image

இடைக்கால பட்ஜெட்டில் அம்மா மினி கிளினிக்குகளுக்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சுகாதாரத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.19,420.54 கோடி ஒதுக்கீடு

2019 உலக முதலீட்டாளர் மாநாட்டில் இருந்து இன்று வரை கையெழுத்திடப்பட்டவற்றில் 89% திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன

81 திட்டங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன, 191 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தை வலுப்படுத்த கூடுதல் மூலதனமாக ரூ.1000 கோடியை அரசு வழங்கும் - ரூ.300 கோடி ஒதுக்கீடு

மதிய சத்துணவுத் திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1953.98 கோடி ஒதுக்கீடு

ஆதி திராவிடர் சிறப்புக் கூறுகள் திட்டத்திற்காக ரூ.13,967.58 கோடி ஒதுக்கீடு

பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக ரூ.1276.24 கோடி ஒதுக்கீடு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்காக ரூ.229.37 கோடி ஒதுக்கீடு

மின்கட்டண மானியங்களுக்காக ரூ.8834.68 கோடி ஒதுக்கீடு

image

உதய் திட்டத்தின் கீழ், கடன்களை மானியமாக மாற்றுவதற்கான இறுதிக்கட்ட மானியமாக ரூ.4563 கோடி ஒதுக்கீடு

உதய் திட்டத்தின் வழிமுறைகளின்படி, இழப்புகளை ஈடுசெய்யும் விதமாக ரூ.7217.40 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு

கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1224.26 கோடி ஒதுக்கீடு

உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1932.19 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் 19,855 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்படும்

மாற்றுத் திறனாளிகளுக்காக கண்டறியப்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments