பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செல்லும் விமானம் இந்திய வான் பரப்பை பயன்படுத்த அனுமதி

0 6573
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செல்லும் விமானம் இந்திய வான் பரப்பை பயன்படுத்த அனுமதி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பயணிக்கும் விமானம், இலங்கை செல்வதற்காக இந்திய வான் பரப்பை பயன்படுத்த இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று, இம்ரான்கான் இலங்கையில் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்திய வான் பரப்பு வழியாக இம்ரான்கானின் விமானம் பயணிப்பதற்கு  மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி விமானத்தில் சென்ற போது, காஷ்மீர் பிரச்சனையைச் சுட்டிக்காட்டி பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்திக் கொள்ள இம்ரான்கான் அரசு அனுமதி மறுத்து விட்டது.

இந்த விவகாரத்தை சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பிடம் இந்தியா முறையிட்டது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments