பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல்-சாப்போவின் மனைவி அமெரிக்காவில் கைது

0 1258
பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல்-சாப்போவின் மனைவி அமெரிக்காவில் கைது

மெக்சிக்கோவை சேர்ந்த, பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சாப்போவின் மனைவி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகின் மிகப் பயங்கரமான போதைப்பொருள் கடத்தல் கும்பல்களில் ஒன்று சினோலா கார்ட்டெல். இதன் தலைவன் எல்-சாப்போ, 25 ஆண்டுகளில் கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை மலை மலையாக அமெரிக்காவுக்கு கடத்தியுள்ளான்.

கடத்தலில் மட்டுமல்ல தப்பிச் செல்லும் கலையிலும் மன்னனான எல்-சாப்போ, கைது செய்யப்பட்டு, அமெரிக்காவில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறான்.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் எல்சாப்போவின் மனைவி எம்மா அய்ஸ்ப்ரோ                  (Emma Coronel Aispuro) விர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments