கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி? மத்திய அரசு பரிசீலனை

கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த தனியார் மருத்துவமனைகளை இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
அடுத்த மாதம் முதல் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் பணிகள் தொடங்க உள்ளன. ஆறு மாதங்களில் 30 கோடி பேருக்கு ஊசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு மாதத்தைக் கடந்த நிலையில் ஒரு கோடியே 14 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 40 முதல் 50 சதவீத தடுப்பூசி போடும் பணிகளை தனியார் மருத்துவமனைகளுக்குத் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி நிலவரத்தை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் அமித் ஷா சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பணிகளை விரைவுபடுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.
Comments