மத்திய பிரதேசத்திற்கு வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை -மத்திய பிரதேச முதலமைச்சர் உத்தரவு

0 540
மகாராஷ்டிரா மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மத்திய பிரதேசத்திற்கு வருபவர்களை உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மத்திய பிரதேசத்திற்கு வருபவர்களை உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல்  குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்ட அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தர உள்ளதாகவும், அங்கிருந்து வருபவர்களை மாவட்ட எல்லையில் பரிசோதனை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார்.

மாஸ்க் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை  மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி சிவராஜ் சிங் சவுகான் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments