டெல்லி விவசாயிகள் பேரணி வன்முறை தொடர்பாக மேலும் ஒருவர் கைது

0 511
குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்தவரான 29 வயது இளைஞர் ஜல்பிரீத் சிங் செங்கோட்டையில் வாளை சுழற்றிய காட்சிகள் வெளியாகி வைரலாகின.

கடந்த மாதம் கைது செய்யப்பட்ட மகேந்திரசிங் என்பவருடன் இவர் இருந்த வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.வன்முறையைத் தூண்டியவர்களில் இவரும் ஒருவர் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

ஜஸ்பிரீத் சிங்கை கைது செய்து அவர் வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள் கலவரம் தொடர்பான செல்போன் பதிவு உள்ளிட்ட ஆதாரங்களைப் பறிமுதல் செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments