கும்பலாக சுற்றுவோம் தொக்கா மாட்டிக்கிட்டா அய்யோ அம்மான்னு கத்துவோம்..! கிராம புள்ளிங்கோஸ் சோகங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் ஒரு மாணவனை முட்டிபோடவைத்து அடித்து உதைத்து அதனை முக நூலில் பதிவிட்ட மாணவனை எதிர் தரப்பு பதிலுக்கு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பலாக சுத்துவதும், எதிர் தரப்புகிட்ட சிக்கிகிட்ட அய்யோ அம்மான்னு கத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கும் நகர்புறத்து புள்ளிங்கோக்களுக்கு எந்த விதத்திலும் குறையாமல் கிராமத்திலும் வீண் வம்பு இழுக்கும் முக்கால் பேண்ட் புள்ளீங்கோஸ் பெருகிவிட்டனர்..!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கின்ற இரு சமூக மாணவர்களுக்கிடையே யார் கெத்து என்பது தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதில் தங்களை சிலர் தாக்குவதை பார்த்து, ஜுனியர் மாணவன் ஒருவன் நக்கலாக சிரித்ததால் ஆத்திரம் அடைந்த ஏற்கனவே அடிவாங்கிய புள்ளீங்கோ ஒன்று தனது கூட்டாளிகளுடன் கும்பலாக சேர்ந்து பிங்க் சீருடை அணிந்த ஜூனியர் மாணவனை மிரட்டி தனியாக அழைத்துச்சென்று சரமாரியாக அடித்து உதைத்து வீடியோ எடுத்தனர்.
கையெடுத்து கும்பிட்டும் அடங்க மறுத்து அந்த மாணவனை முட்டிபோட வைத்து மன்னிப்பு கேட்கச்சொல்லி காட்டுத்தனமாக மீண்டும் மீண்டும் பாக்சர் போல தாக்கியது அந்த புள்ளீங்கோ..!
அந்த மாணவன் கெஞ்சிக்கேட்டும் விடாமல் அவனை கையெடுத்து கும்பிடச்சொல்லி தாக்குதல் நடத்திய புள்ளிங்கோவுக்கு துணையாக வந்த மூன்றரை அடி உயர புள்ளிங்கோவும் சமாதானப்படுத்துவது போல நடித்து தாக்கியது
இறுதியில் போனால் போகட்டும் என்று கூறி அந்த மாணவனை அடித்து விரட்டிவிட்டுச்சென்றது அந்த புள்ளீங்கோ கும்பல்..!
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பதில் அடி கொடுக்கும் விதமாக ஜூனியர் மாணவனுக்கு துணையாக இரு சக்கர வாகனத்தில் சென்ற எதிர்தரப்பு புள்ளிங்கோஸ் தங்கள் வெயிட்டை காட்டுவதற்கு களம் இறங்கியது. பள்ளிக்கூடம் முடிந்து வந்து கொண்டிருந்த சம்பந்தப்பட்ட சீனியர் புள்ளிங்கோ மாணவனை மறித்து 2 வது தடவையாக தாக்கினர்
தங்கள் பகுதி மாணவனை முட்டிபோடவைத்து தாக்கியதற்கு பதிலடியாக அவன் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியவர்களை அந்தவழியாக வந்த ஆசிரியர் ஒருவர் தடுத்து நிறுத்தினார்
அந்தவழியாக சென்ற பெண்களும் சத்தம் போட்டதால் பதில் தாக்குதல் நடத்தியவர்கள், உடனடியாக பைக்கில் ஏறி பறந்தனர், இந்த கும்பலும் சீனியர் மாணவனை தாக்கிய காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வைரலாக்கியது.
ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஆண்டுக்கு சராசரியாக ஒரு மாணவனுக்கு 32 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு செலவிடுகின்றது. சீருடை, பாடப்புத்தகம், காலணி உள்ளிட்ட 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இத்தனை சலுகைகளையும் பெற்றுக் கொண்டு படிக்கின்ற வேலையை விட்டு வீணாக வம்பு இழுக்கும் சில ஊதாரி மாணவர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் ? என அடித்து காயப்படுத்திக் கொண்டு சமூக வலைதளம் மூலம் கலவரத்தீயை பற்றவைக்க முயல்வதாக சுட்டிக்காட்டியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்
அதே நேரத்தில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை அழைத்து வரும் காலத்தில் இது போன்ற விபரீத தாக்குதல் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு
Comments