இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்ப்பு

0 2509
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்ப்பு

ங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக விலகிய உமேஷ் யாதவ், காயம் குணமாகாததால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தேர்வாகவில்லை.

இந்நிலையில் காயத்திலிருந்து மீண்ட அவர், உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதை அடுத்து இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 24 ஆம் தேதி அகமதாபாத் மொதேரா மைதானத்தில் தொடங்குகிறது.

ஒன்றரை லட்சம் பேர் அமரக்கூடிய உலகில் மிகப்பெரிய அந்த கிரிக்கெட் மைதானத்தை குடியரசுத் தலைவர் 24 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments